கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்

5 February 2021, 7:16 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 2847 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து போடும் பணி கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு தலைமையிட மருத்துவமனை, செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டவிளை அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்களில் முதலில் காரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் தற்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்திற்கு முதல்கட்டமாக 22 ஆயிரத்து 600 தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டது.

குமரி மாவட்டம் முழுவதும் இதுவரை 2847 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். இந்நிலையில் குமரிமாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட ஆரம்பித்து 20- நாட்களுக்குப் பிறகு கோட்டார் அடுத்த வடிவீஸ்வரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று முதல் முறையாக கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். தற்போதைய நிலவரப்படி குமரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,875. இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 259. கொரோனா பாதிப்பு காரணமாக 104 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

Views: - 0

0

0