கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

19 April 2021, 9:32 pm
Quick Share

தேனி: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொரோனா விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளிகளுக்கு போதிய மருத்து, மாத்திரைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும், தனி வார்டு போன்ற வசதிகள் உள்ளன வா என்று சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கல்லூரியின் முதல்வர் கூட்டரங்கில் இன்று காலை தேனி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி தலைமையிலான கொரோனா பரவல் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்ற ஆக்சிஜன் சிலிண்டரை பார்வையிட்டார். தொடர்ந்து கொரோனா தனிப்பிரிவு அமைக்கப்பட்ட வளாகம் பகுதியினை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், துணை தலைவர் இளங்கோவன் உட்பட மருத்துவர்கள் உடனிருந்தனர்.

Views: - 24

0

0