உழைக்கும் பாட்டாளிகள் நிறைந்த இயக்கம் திமுக: அமைச்சர் ஏ.வ. வேலு பேச்சு…

Author: kavin kumar
29 September 2021, 8:46 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: உழைக்கும் பாட்டாளிகள் நிறைந்த இயக்கம் திமுக என்றும், உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் தரும் இயக்கம் திமுக என அமைச்சர் ஏ.வ. வேலு தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் சங்கராபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சரும் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான ஏ.வ.வேலு கலந்துகொண்டு பேசும்போது உழைப்பவர்களும், பாட்டாளிகளும் நிறைந்த இயக்கம் தான் திமுக.,திமுக வில் உழைப்பவர்களுக்கு எப்போதுமே அங்கீகாரம் உண்டு உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை நிச்சயமாக கிடைக்கும். என்று பேசினார்.

தளபதியாரின் ஆட்சி மக்களுக்கான ஆட்சி தளபதியார் அவர்கள் கொரோனா கால நிவாரண நிதியாக ரூ 4000 மற்றும் 16 வகையான மளிகைப் பொருட்களும் வழங்கி உள்ளார். உள்ளாட்சியில் நல்லாட்சி தொடர்ந்திட உதயசூரியனுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொருப்பாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களுமான உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மற்றும் நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன் திரளாக கலந்து கொண்டனர்.

Views: - 91

0

0