குடி போதையில் சொகுசு காரை ஓட்டி தடுப்பில் மோதி விபத்து…

Author: kavin kumar
25 August 2021, 1:58 pm
Quick Share

சென்னை: சென்னையில் குடி போதையில் சொகுசு காரை ஓட்டி சென்ற நபர் சாலையில் உள்ள தடுப்பில் மோதி விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் தனது பணிகளை முடித்து கொண்டு சொகுசு காரில் , வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் வழியாக சாலையில் சென்று கொண்டிருந்தார்.ரவிக்குமார் , சொகுசு காரை ஓட்டும் போது மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கார் , சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி காரின் முன் பக்க டயர் வெடித்து கார் நிலை குலைந்து தலை கீழாக கவிழ்ந்துள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் , காரை ஓட்டி வந்த ரவிக்குமாரை காரிலிருந்து தூக்கி , ஆம்புலன்ஸ்க்கு மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த காவல் துறையினர் ரவிக்குமாரை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.விசாரணையில் , ரவிக்குமார் மது போதையில் வந்தது உறுதியானது. மேலும் சொகுசு காரில் உள்ள பாதுகாப்பு பலூன் வெளியே வந்ததால் உயிரிழப்பு ஏற்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர். இது குறித்து அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 118

0

0