மின்வாரிய ஊழியர் மதுவில் விஷம் அருந்தி தற்கொலை:தாய், தந்தை, தங்கை உறவினரிடம் மன்னிப்பு கேட்கும் உருக்கமான வீடியோ

Author: Udhayakumar Raman
16 September 2021, 1:29 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே மின்வாரிய ஊழியர் மதுவில் விஷம் அருந்தி தற்கொலை செய்ததையடுத்து உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள அய்யம்பட்டி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவர் கடந்த 1வருடத்திற்கு முன்பு மின் வாரியத்தில் பணிக்கு சேர்ந்தார். தாய், தந்தை இறந்து விட்ட நிலையில் தனிமையில் இருந்த இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மதுவை விட முடியாமல் இருப்பதால் இன்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மதுவில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். மேலும் வீடியோ ஒன்று பதிவிட்டு தனது சித்தப்பாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் யாரிடமும் பேசாமல் தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்ந்து உள்ளேன். இவ்வளவு நாளா எனக்கு தெரியவில்லை இப்போது தான் தெரியுது என்னைப்போல் இருப்பவர்கள் உயிருடன் இருக்கக்கூடாது. மன்னிக்கவும் அப்பா, அம்மா, தங்கச்சி எல்லோருக்கும் பைய், யைய் என என உருக்கமாக அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் அவர் எழுதிய கடிதத்தில், அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்களை விட்டுப் போகிறேன் என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்னை மன்னித்துவிடுங்கள் என்னால் குடி பழக்கத்தை விட முடியவில்லை என் மரணத்திற்கு காரணம் என் குடிப்பழக்கம் என்னை போல் யாரும் குடிகாரர்களாக மாறி விடாதீர்கள் குடிப்பழக்கம் ஒருவன் வாழ்க்கை எப்படியெல்லாம் மாற்றும் என்று நான் தெரிந்து கொண்டேன் குடிப் பழக்கத்தை விட முடியவில்லை அதனால் கடைசியாக மதுவில் விஷம் கலந்து குடிக்கிறேன். உங்கள் எல்லாரையும் விட்டு நான் பிரிகிறேன். அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் நான் உங்களுக்கு மகனாக பிறக்கிறேன் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள்.

கருப்பண்ணனிடம் நாற்பதாயிரம் ரூபாய் மற்றும் ஆனந்திடம் முப்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளேன். ஆனந்திடம் 2 லட்சம் கொடுத்துள்ளேன் அதை வாங்கி கடனை அடைத்து விடுங்கள் என்று கடிதத்தில் எழுதியுள்ளார்.வீடியோ பதிவை பார்த்த அவரது உறவினர்கள் இளையராஜாவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நவல்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 153

0

0