மின்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

21 September 2020, 6:12 pm
Quick Share

புதுச்சேரி: யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் துறை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் துறை தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 100க்கும் மேற்பட்ட மின் துறை ஊழியர்கள் துணைநிலை ஆளுநரிடம் மனு அளிப்பதற்காக தலைமை மின் துறை அலுவலகத்தில் இருந்து துணை நிலை ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது மத்திய அரசின் இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர், பின்பு துணைநிலை ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.

Views: - 6

0

0