நிலுவை சம்பளத்தை வழங்க கோரி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்…

10 September 2020, 1:24 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாசிக் மற்றும் பாப்ஸ்கோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சட்டப்பேரவை அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாசிக் மற்றும் பாப்ஸ்கோ நிறுவனத்தில் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர், இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது, இந்நிலையில் பாசிக் மற்றும் பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், பாசிக் பாப்ஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் உடனடியாக திறந்து நடத்த வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சட்டமன்றம் அருகே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற அரசு பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட ஊழியர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 6

0

0