ஒற்றை காட்டுயானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு
Author: kavin kumar21 August 2021, 2:57 pm
நீலகிரி: குன்னூர் அருகே ஒற்றை காட்டுயானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே லட்சுமணன் என்பவர் உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தூதூர்மட்டம் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஒற்றை காட்டுயானை குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு அங்கிருந்த வாழை மரங்களை நாசம் செய்தது. இந்த நிலையில் அருகே உள்ள அறை ஹட்டி கிராமத்திற்குள் இன்று ஒற்றை காட்டுயானை புகுந்தது. நேற்று இரவு அந்த கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (56) என்பவர் தனது வீட்டிற்கு இரவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்போது புதர் மறைவிலிருந்த ஒற்றை காட்டு யானை லட்சுமணனை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் . மேலும் அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் காட்டுயானையை விரட்டி லட்சுமனின்உடலை மீட்டனர். ஆக்ரோஷமாக சுற்றித் திரியும் ஒற்றை காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
0
0