சரக்கு கப்பல் மோதிய விபத்தில் மாயமான மீனவரை மீட்க கோரி குடும்பத்தினர் கண்ணீர் மல்க மனு

15 April 2021, 3:37 pm
Quick Share

தூத்துக்குடி: மங்களூர் அருகே கடல் பகுதியில் சரக்கு கப்பல் மோதிய விபத்தில் மாயமான மீனவரை மீட்க கோரி குடும்பத்தினர் கண்ணீர் மல்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியில்  ஜாபர் என்பவருக்கு சொந்தமான அரப்பா என்ற மீன்பிடி விசைப்படகில் கடந்த 11ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்களும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 7 மீனவர்கள் உட்பட 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் கடந்த 13ம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூர் ஆழ்கடல் பகுதியில் சுமார் 60 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஐபிஎல் லீ  ஹாவேறே (   APL LE HAVRE)  சிங்கப்பூரை சார்ந்த சரக்குக் கப்பல் மோதியதில் படகு மூழ்கி பேராபத்து ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சார்ந்த வேல்முருகன் என்ற மீனவரும் மேற்கு வங்கத்தைச் சார்ந்த சுனில் தாஸ் என்ற மீனவரும் உயிரோடு விபத்து ஏற்படுத்திய ஏபிஎல்  லீ ஹவரே என்ற கப்பல் ஊழியர்கள மீட்டுள்ளனர்.

மேலும் மூன்று மீனவர்களது   உடல்கள்  இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.  இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீனவ கிராமத்தை சேர்ந்த டென்சன் உள்ளிட்ட 9 மீனவர்கள் மாயமானார்கள் இந்த மீனவர்களை தேடும் பணியை இந்திய கடலோர காவல்படை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது.  இந்திய கடலோர காவல்படை கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் கடலில் மாயமான தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த டென்சன் என்ற மீனவரை மீட்பதற்கு உரிய அழுத்தத்தை தமிழக அரசு மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என தெரிவித்து டென்சனின் மனைவி ராணி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளிட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கண்ணீர் மல்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் .

உரிய மீன்பிடி தொழில் இல்லாத காரணத்தால் கேரள மாநிலத்தின் சென்று மீன்பிடி தொழில் செய்து வந்த டென்சன் தற்போது கடலில் ஏற்பட்ட விபத்தில் மாயமாகியுள்ளார் அவரை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு சேர்ந்த மீனவர் விபத்தில் சிக்கி மாயமாகி உள்ளார் என்ற தகவல் கிடைத்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டினார்கள் எனவே விரைந்து மாயமான மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மீனவ குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்

Views: - 15

0

0