டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயிகள் டெல்லிக்கு பயணம்…

Author: Udayaraman
3 August 2021, 7:28 pm
Quick Share

தருமபுரி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தருமபுரி மாவட்ட விவசாயிகள் மொரப்பூர் ரயில்வே நிலையத்திலிருந்து இன்று டெல்லி நோக்கி புறப்பட்டு சென்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 8 மாதங்களை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் விவசாயிகள் சங்கம் சார்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெல்லிக்கு சென்று போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக விவசாய சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டது.

இதனை தொடர்ந்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தருமபுரி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மழைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் டில்லி பாபு தலைமையில் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில்வே நிலையத்திலிருந்து இன்று டெல்லி நோக்கி புறப்பட்டு சென்றனர். டெல்லிக்கு செல்லும் விவசாயிகளுக்கு ஆதரவாக சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் வழியனுப்பி வைத்தனர்.

Views: - 188

0

0