மகனை கொன்றவர்களை பழி தீர்க்க காத்திருந்த தந்தை கைது: நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்திகள் பறிமுதல்

5 July 2021, 4:31 pm
Quick Share

திருவள்ளூர்: மகனை கொன்றவர்களை பழி தீர்க்க நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்த தந்தையை போலீசார் கைது செய்தனர். மேலும் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள், கத்திகளை பறிமுதல் செய்து விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே உள்ள துராபள்ளம் பகுதியை சேர்ந்தவர் கோதண்டம். இவரது மகன் தினக்குமார் இவர் மீது ஆந்திரா தமிழ்நாடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிருபுழல்பேட்டை சுடுகாடு அருகே மர்ம கும்பலால் தினக்குமார் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தனது மகனை வெட்டிக் கொலை செய்த கும்பலை பழிதீர்க்க அவரது தந்தை கோதண்டம் பல்வேறு திட்டங்களை திட்டியதாகவும், அதற்காக அவர் நாட்டு வெடிகுண்டுகளை வாங்கிவந்து கொல்ல முயற்சி செய்ததாக கும்மிடிப்பூண்டி அருகே பேருந்தில் அவர், வந்தபோது கடந்த 2018ம் ஆண்டு சிப்காட் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவரிடமிருந்து 1 நாட்டு வெடிகுண்டு, கத்தியை பறிமுதல் செய்த போலீசார், தற்போது மீண்டும் தினகுமாரின் தந்தை கோதண்டத்தை கம்மவார்பாளையத்தில் ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் நான்கு சிறியவகை கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவரை பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கோதண்டத்தை போலீஸார் இருமுறை நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்ததாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை உரிய பாதுகாப்புடன் மண்ணில் புதைத்து மூட்டையில் வைத்து அதனை செயல்இழக்கும் செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர்.

Views: - 133

1

0