கஞ்சா கடத்தி வந்த காரை விரட்டி சென்று பிடித்த காவலர்:கஞ்சா வியாபாரி சிறையில் அடைப்பு…

Author: Udhayakumar Raman
27 July 2021, 1:27 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் காரில் கஞ்சா கடத்தி வந்த கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் மன்னார்புரம் பகுதியில் வந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் காரை ஓட்டி வந்த நபர் நிற்காமல் செல்லவே, தனிப்படை காவல்துறையினர் இருசக்கர வாகனங்களில் விரட்டி சென்றனர். அப்போது தலைமை காவலர் சரவணன் காரில் பாய்ந்து ஏறி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் காரில் தொங்கியபடி உயிரை பணயம் வைத்து குற்றவாளியை கைது செய்தார். விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவூரை கிராமத்தை சேர்ந்த முகமது அனிபா என்பதும்,

அவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் வழக்கு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம்ருந்த 21 கிலோ கஞ்சா, மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட முகமது அனிபாவை திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உயிரை பணையம் வைத்து காரை விரட்டி பிடித்த தலைமை காவலர் சரவணனை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டி ரூபாய் 25,000 சன்மானம் அறிவித்தார். தலைமைக் காவலர் சரவணன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Views: - 149

0

0