தக்கலை அருகே பெண் மாயம்.! கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்தாரா.?
27 February 2021, 6:54 pmகன்னியாகுமரி: தக்கலை அருகே கள்ளக் காதலனுடன் சென்ற மனைவியை மீட்டு தரக்கோரி கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் .இவரது மனைவி ஷெர்லின் ஜினி (34). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு மாயமானார் .இதுகுறித்து கணவர் மணிகண்டன் தக்கலை போலீசில் புகார் தெரிவித்துள்ளார். புகாரில் என்னுடைய மனைவி ஷெர்லின் ஜினியை முளகுமூடு பகுதியை சேர்ந்த மைக்கேல் கிளாட்சன் என்பவர் அழைத்து சென்றுள்ளார். அவரிடம் இருந்து எனது மனைவியை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு புகார் தெரிவித்திருந்தார். மணிகண்டனின் புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஷெர்லின் மினி மற்றும் மைக்கேல் கிளாட்சனை தேடி வருகின்றனர்.
0
0