பெண் காவலர் கழுத்தை நெரித்து கொலை: கணவரை கைது செய்து விசாரணை

Author: kavin kumar
21 August 2021, 6:29 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் குடும்ப பிரச்சனை காரணமாக கணவரால் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை சூலக்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து பானுப்பிரியா இவர் தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் சூலக்கரை பகுதியில் வீடு எடுத்து வாடகைக்கு வசித்து வருகின்றனர். இவர் கணவர் விக்னேஷ் மதுரை சிப்காட் அரசு போக்குவரத்து பனிமலையில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் அளவுக்கு அதிகமாக குடிக்கும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு வீட்டிற்கு குடித்துவிட்டு வந்த விக்னேஷ் குடிப்பதற்கு மேலும் பணம் கேட்டு மனைவியிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். பணம் தர மறுத்த மனைவி தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றியதில் பானு பிரியாவை காவலர்கள் அணியும் பெல்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அருகே இருந்தவர்கள் விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல் துறையினர் பானுப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் பானுப்பிரியாவின் கணவர் விக்னேஷ் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் காவலர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Views: - 252

0

0