லோன் தருவதாக கூறி மோசடி: மோசடி மன்னன் திருவள்ளூரில் கைது

Author: kavin kumar
19 August 2021, 6:31 pm
Quick Share

திருவள்ளூர்: லோன் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் நூதானமாக முறையில் 50க்கும் மேற்பட்ட நபர்களிடம் 15-லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் பறித்த பட்டதாரி இளைஞர் திருவள்ளூரில் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி கலா இவரிடம் பிரபல லோன் கம்பெனியில் (பஜாஜ்)இருந்து போன் செய்வதாக கூறி தங்களுக்கு குறைந்த வட்டியில் லோன் அளிக்க இருப்பதாக கூறி டாக்குமெண்ட் சார்ஜ் செலவுக்கு 3 தவணையாக சுமார் 19 ஆயிரத்து 195 ரூபாயை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞரான பரத் என்பவர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது சென்னை சாலிகிராமம் பகுதியில் தங்கி பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து தற்போது பணியில் இல்லாமல் இருக்கிறார்.இவர் இதே போன்று ஒரு மாதத்திற்கு முன்பு மதுரவாயல் பகுதியில் பெண் ஒருவரை ஏமாற்றி 6 ஆயிரம் ரூபாய் பெற்ற வழக்கில் காவல் துறையினர் கைது செய்து
ஒரு மாதம் சிறையில் அடைத்து இருந்த நிலையில்,

சிறையிலிருந்து வெளிவந்த இரண்டு வாரத்தில் அதே பாணியில் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பெண்ணை ஏமாற்றியது குறிப்பிடத்தக்கது. இடையே ஏமாந்த பெண் புகார் அளிக்க திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பெயரில் மோசடியில் ஈடுபட்ட பட்டதாரி பலே கில்லாடி பரத் என்ற இளைஞரை தேடி வந்த திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் மனோஜ் பிரபாகர்தாஸ் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் விசாரணை மேற்கொண்டதில், இவர் இதே போன்று தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்து சுமார் 15 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் ஏமாற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் மோசடி மன்னன் பரத்தை திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Views: - 186

0

0