நாகர்கோவிலில் குவிந்த விநாயகர் சிலைகள்: உற்சாகமாக வாங்கி செல்லும் பொதுமக்கள்

Author: Udhayakumar Raman
7 September 2021, 8:16 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பூஜைக்காக உற்ச்சாகத்துடன் வாங்கி சென்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. கொரோனா மூன்றாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுஇடங்களில் சதுர்த்தி விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே விழாவை கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் நகரின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே சாலையோரம் ஆயிரக்கணக்கான வண்ண வண்ண விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சிலைகள் ரூ.300 தொடங்கி ரூ.1200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பூஜையில் வைத்து வணங்க ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Views: - 211

0

0