மக்கள் மற்றும் தமிழ் மொழிக்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கலைஞர்… நாராயணசாமி புகழாரம்

7 August 2020, 8:20 pm
Pondy Cm Byte- updatenews360
Quick Share

புதுச்சேரி: தமிழக மக்கள் மற்றும் தமிழ் மொழிக்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கலைஞர் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவு தினம் இன்று புதுச்சேரி மாநில திமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது. நினைவு தினத்தையொட்டி ஆம்பூர் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் உருவப் படத்திற்கு புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவா, வெங்கடேசன், காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்ரமணியன், திமுக நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக மக்கள் மற்றும் தமிழ் மொழிக்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கலைஞர் என்றும் புதுச்சேரியில் கலைஞர் கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Views: - 9

0

0