சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அவதூறு பேசிய வழக்கு: அமமுக வடக்கு மாவட்ட செயலாளரை கைது செய்ய இடைக்கால தடை

22 September 2020, 5:49 pm
HC Madurai 01 updatenews360
Quick Share

மதுரை: சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கரை அவதூறு பேசியதாக கூறி பதியபட்ட வழக்கில் புதுக்கோட்டை அமமுக வடக்கு மாவட்ட செயலாளரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் பிரபாகரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் மனுவை தாக்கல் செய்தார். அதில், “கடந்த செப்டம்பர் 12 ம் தேதி விராலிமலையில் நடத்த அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கரை பற்றி அவதூறாக பேசி அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறி புதுக்கோட்டை நகர் காவல் நிலைத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முழுமையாக ஆளும் கட்சியின் தூண்டுதலின் பெயரில் பதியப்பட்ட வழக்கு.

எனவே என்மீது பதியபட்டுள்ள வழக்கில் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது, வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது, இதையடுத்து புதுக்கோட்டை அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் பிரபாகரனை செப்டம்பர் 30 வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Views: - 7

0

0