சென்னை: சென்னையில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐ.சி.எப் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சார்லஸ். இன்று ஐ.சி.எஃப் பகுதி யில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து பின் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனால் சக காவலர்கள் ஐ.சி.எஃப் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இறந்த சார்லஸ்க்கு சாந்தி என்ற மனைவியும் அவினாஷ், ஹரிஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0