கஞ்சா வழக்கில் கடமை தவறிய காவல் துறை ஆய்வாளர் படை இடை நீக்கம்..!!!

Author: Udhayakumar Raman
13 September 2021, 2:31 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்யத் தவறிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி குடோனில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் இதில் முக்கிய குற்றவாளிகளான டீல் இம்தியாஸ் மற்றும் செல்வக்குமார் ஆகியோர் தலைமறைவாகினர். இதனிடையே கஞ்சா கடத்தலை காவல்துறையினருக்கு தெரிவித்ததாக, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகி வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டார். காவல்துறையினரின் விசாரணையில், தலைமறைவாக உள்ள டீல் இம்தியாஸின் ஆட்கள் தான் வசீம் அக்ரமை கொலை செய்தது தெரிய வந்தது. இதனால், கஞ்சா கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யத் தவறியதால், கொலை நடந்திருப்பதாகக் கூறி, வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து, வேலூர் சரக டிஐஜி பாபு உத்தரவிட்டுள்ளார்.

Views: - 357

0

0