கோவையில் இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் அதிநவீன கிரையோ அபலேசன் கருவி அறிமுகம்..!!

Author: Aarthi Sivakumar
21 October 2021, 2:23 pm
Quick Share

கோவை: தமிழகத்தில் முதன் முறையாக கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் சீரற்ற வேகமான இதயதுடிப்பை கட்டுபடுத்தும் அதிநவீன கிரையோ அபலேசன் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிறக்கும் போதே இதயத்தில் ஏற்படும் குறைபாடுகள் மாரடைப்பு ஏற்பட்டு இதயம் பாதிக்கப்படுவது, மேலும் இதயத்தில் உள்ள வால்வுகளின் உள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படுகிறது.

சீரற்ற இதயத் துடிப்பை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை செய்வது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இந்நிலையில்,கோவை அவினாசி சாலையில் உள்ள கேஎம்சிஎச் மருத்துவமனையில், சீரற்ற வேகமான இதய துடிப்பை கட்டுபடுத்தும், வகையிலான கிரையோ அபலேசன் எனும் நவீன வகையிலான கருவி, மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக நிறுவப்பட்ட இந்த கருவியின் பயன்பாடு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில்,கே.எம்.சி.எச் மருத்துமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிச்சாமி பேசுகையில், அடிக்கடி இதயம் வேகமாக துடித்தல், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி, போன்ற உணர்வு, தலைசுற்றல் அறிகுறிகள் இருந்தால், உடலின் பிற பாகங்களுக்கு ரத்த ஒட்டம், சுழற்சியாவதை தடுக்கும் எனவும், உலகில் 60 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு இந்த சீரற்ற இதயத்துடிப்பு உள்ளது, எனவும், இதனால் பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.

எனவே சீரற்ற இதயத் துடிப்பை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த கருவி இங்கே நிறுவப்பட்டு உள்ளதாக கூறினார். தொடர்ந்து கே.எம்.சி.எச் மருத்துவமனையின் இதய மருத்துவர் டாக்டர் தாமஸ் அலெக்சாண்டர் மற்றும் இதயத்துடிப்பு பிரிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ் ஆகியோர் கூறுகையில்,இந்த கருவியை கொண்டு சீரற்ற இதயதுடிப்பை, புதுமையான முறையில் 80 நாடுகளில் ஒரு மில்லியன் நோயாளிகளுக்கு இந்த கருவி கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

Views: - 102

0

0