36 ஆவது தேசிய புத்தக கண்காட்சி விழா

12 January 2021, 10:33 pm
Quick Share

கரூர்: கரூரில் 36 ஆவது தேசிய புத்தக கண்காட்சி விழா இன்று துவங்கி வரும் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கரூரில் உள்ள நகரத்தார் சங்க கட்டிட திருமண மண்டபத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட், இந்தியா நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் திருச்சி மற்றும் திருக்குறள் பேரவை இணைந்து நடத்திய 36 ஆவது தேசிய புத்தக கண்காட்சி தொடக்கவிழா இன்று துவங்கி வரும் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் மருத்துவர் ரமேஷ் 36 தேசிய ரிப்பன் வெட்டி புத்தகக் கண்காட்சியை துவக்கி வைத்தார்.

மேலும் இந்த புத்தகக் கண்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள நிலையில், இதில் 20 வகையான திருக்குறள் விளக்கவுரை புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்ச்சியை திருக்குறள் பேரவை தலைவர் மேலை பழனியப்பன் முதல் விற்பனையை துவங்கி வைத்தார்.

Views: - 7

0

0