விவசாயிகள் நுண் நீரேற்று பாசன சங்க விவசாயிகள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்பு

8 November 2020, 6:28 pm
Quick Share

கரூர்: கரூர் அருகே நடைபெற்ற விவசாயிகள் நுண் நீரேற்று பாசன சங்க விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கரூரை அடுத்த வெண்ணைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆத்தூர் சோளியம்மன் விவசாயிகள் நுண் நீரேற்று பாசன சங்க விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அச்சங்கத்தின் தலைவர் கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆத்தூர், மண்மங்களம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், காவிரி ஆற்றில் கிணறுகள் அமைத்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வந்து பிச்சம்பட்டி, உப்பிடமங்களம், வாங்கல், உப்பிடமங்களம், பரமத்தி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம், அவை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

Views: - 16

0

0