கரூரில் பொது இடங்களில் ஒட்டப்பட்ட கட்சி விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் அகற்றம்..!!

27 February 2021, 4:32 pm
karur - updatenews360
Quick Share

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் போஸ்டர்களை நகராட்சி ஊழியர்கள் கிழித்தனர்.

2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் இதற்கான அறிவிப்பு நேற்று மாலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அவர்கள் வரைந்திருக்கும் சின்னங்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் மறைத்து வருகின்றனர். அரசு சுவற்றில் அரசியல் கட்சிகள் & அரசு சங்கங்களின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி மற்றும் போஸ்டர்கள் கிழிக்கும் பணியில் கரூர் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக வளாகத்தின் முன்பு போஸ்டர்கள் கிழிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக களமிறங்கி சுவரொட்டி எனப்படும் போஸ்டர்களை கிழித்து வருகின்றனர்

Views: - 8

0

0