இரண்டாம் திருமணம் செய்த கணவர் மீது முதல் மனைவி புகார்:தலைமறைவான புதுமாப்பிள்ளை

21 September 2020, 11:21 pm
Quick Share

திருச்சி: சமயபுரம் பகுதியில் வரதட்சனை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்தி தாய் வீட்டிற்கு பெண் சென்ற நிலையில் வேறொரு பெண்னுடன் திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பெண் லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் வசிக்கும் பெருமாள் மகன் ஆனந்தபாபு (28)). இவர் இப் பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இவருக்கும் மணப்பாறை கொடப்பட்டி பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பெரியவர்களால் நிச்சயிக்கப்ட்டு திருமணம் முடித்துள்ளனர். இந்நிலையில் வரதட்சனை கேட்டு தொடர்ந்து ஆனந்தபாபு அவரது அண்ணன், பெற்றோர், ஆகியோர் மஞ்சுளாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மஞ்சுளா அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் தற்போது மண்ணச்சநல்லூர் காந்தி நகர் பகுதியில் உள்ள பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துள்ளார் ஆனந்தபாபு. இது குறித்து தான் உயிருடன் இருக்கும் போது, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த தனது கணவர் ஆனந்தபாபு உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மஞ்சுளா புகார் அளித்ததின் பேரில் போலீசார் ஆனந்தபாபுவை தேடி வருகின்றனர்.

Views: - 6

0

0