மதுபானம் விற்பனை செய்த இருவர் 54 மதுபாட்டில்களுடன் கைது

29 November 2020, 10:12 pm
Quick Share

திருச்சி: லால்குடி அருகே டாஸ்மாக் கடை அருகே மதுபானம் விற்பனை செய்த இருவர் 54 மதுபாட்டில்களுடன் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதிகளில் அரசு மதுபானங்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து வந்த புகாரையடுத்து தனிப்படை அமைத்து இன்று சோதனையில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது லால்குடி ரயில்வே மேம்பாலம் அருகே அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடை அருகே இருவர் மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்தனர் .

இருவரை பிடித்து போலீஸார் விசாரித்த போது அதே பகுதியில் உள்ள அய்யன்வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம், சரவணன் என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 54 மதுபாட்டில்களையும், 490 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

Views: - 0

0

0