புகாரை வாபஸ் பெற போலீஸ் எஸ்ஐ மிரட்டுவதாக புகார் கொடுத்த நபர் சடலமாக மீட்பு: உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்

Author: kavin kumar
31 October 2021, 5:30 pm
Quick Share

திருச்சி: பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க போலீஸார் மிரட்டிய நிலையில் பாழடைந்த கிணற்றில் பாதிக்கப்பட்ட விவசாயி முகத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே கீழவங்காரம் கிராமத்தைச் சேர்ந்த நீலாவதிக்கும், இதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் எழிலரசி க்கும் இடப்பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் பிரச்சினைக்குறிய இடத்தில் இருந்த கட்டடத்தினை வழக்கறிஞர் எழிலரசி பொக்லின் இயந்திரம் மூலம் இடித்துள்ளார். இதனை தடுத்த நீலாவதியை வழக்கறிஞர் எழிலரசி மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த நீலாவதி மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு கடந்த 7 நாட்களாக தொடர்சிகிச்சைப் பெற்று வருகிறார். இது தொடர்பாக சிறுகனூர் காவல்நிலையத்தில் நீலாவதியின் மகன் பிரகாஷ் புகார் அளித்தும், புகார் அளித்ததற்கான மனுரசீதுவோ, வழக்கு பதியவில்லை போலீஸார்.

இது குறித்து திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் சிறுகனூர் காவல்நிலைய எஸ்.ஐ முருகையா வழக்கறிஞர் மீது கொடுத்தப் புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மிரட்டியுள்ளார் போலீஸ் எஸ்.ஐ. இது குறித்து பாதிக்கப்பட்ட நீலாவதியின் மகன் பிரகாஷ் கடந்த 28 ம் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது;- நான் கொடுத்த புகார் மீதும், புகாரை வாபஸ் பெற வேண்டுமென மிரட்டிய சிறுகனூர் எஸ்.ஐ முருகையா மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக கூறினார். இந்த செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிப்பரப்பான நிலையில்,

பாதிக்கப்பட்ட நீலாவதி கணவர் கிருஷ்ணமூர்த்தி கடந்த 29 ம் தேதி இரவு சமயபுரம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வீடு திரும்பிய போது எஸ்ஆர்எம் மருத்துவமனை அருகே வந்த போது சமயபுரம் போலீஸார் கிருஷ்ணமூர்த்தி இருசக்கர வாகனத்தினை பறித்து கைது செய்ய முயன்ற போது தப்பியோடிய கிருஸ்ணமூர்த்தி அப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் முகத்தில் காயங்களுடன் சடலமாக சமயபுரம் போலீஸார் மீட்டனர். போலீஸார் தனது தந்தையினை அடித்து கொலை செய்ததாக கூறி உயிரிழந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி, மகன், மகள்கள் உறவினர்கள், கிராம மக்கள் என 50 திற்கும் மேற்பட்டோர் எஸ்ஆர்எம் மருத்துவமனை அருகேயுள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 171

0

0