கிண்டல் அடித்த 3 வயது சிறுவன் கொலை: தாய்மாமன் செய்த கொடூரம்…!!!

16 July 2021, 7:47 pm
Quick Share

நீலகிரி: உதகை அருகே 6 வயது சிறுவனை கொலை செய்த தாய் மாமனை போலீசார் கைது செய்தனர்.

உதகை அருகே மஞ்சனக்கொரை ஜல்லிக்குழி பகுதியில் ராஜ்குமார், ஷாலினி ஆகியோரின் 6 வயது மகன் ஜீவன் ஸ்ரீ. ராஜ்குமார் – ஷாலினி இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் இவர்களின் மகன் ஜீவன் ஸ்ரீ அவனது பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறான். இவர்களின் வீட்டருகே குடியிருந்து வருபவர் சிறுவனின் மாமா விஜயகுமார். சிறுவன் ஜீவன் ஸ்ரீயும் மாமா விஜயகுமாரும் அடிக்கடி கிண்டல் அடித்து விளையாடி வருவது வழக்கம். அதே போன்று சிறுவன் தனது மாமாவை கிண்டல் செய்து விளையாடு உள்ளான். இதில் அவனது மாமா விஜய குமார் சற்று கோபபட்டு சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கோபத்தில் சிறுவனை (அரம்) கம்பியால் தாக்கியுள்ளார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் வலியால் துடித்துள்ளான். சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் சிறுவனை உதகை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இதன் பேரில் உதகை நகர் மத்திய காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு சிறுவனுக்கு தலையில் ஏற்பட்ட காயத்தை பற்றி விசாரித்த போது, சிறுவனின் மாமா விஜயக்குமார் பலமாக அடித்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் இன்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதனை தொடர்ந்து உதகை B1 காவல் துறையினர் விஜய குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 126

0

0