ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடம்.!

1 February 2021, 5:30 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 28 கோடிமதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள 2 அறுவை சிகிச்சை அரங்கம், 32 படுக்கை அறை கட்டிடம் உட்பட 6 கட்டங்களுக்கான அடிக்கல்லை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் இன்று நாட்டினார்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதியதாக 2 அறுவை சிகிச்சை கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.இதில் 150 மாணவ மாணவியர் தங்கும் அளவில் 8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிடம், 100 மாணவர்கள் தங்கும் அளவில் 6.5 கோடி மதிப்பிட்டிலான கட்டிடம், தேர்வு கூட கட்டிடம், மருத்துவ பதிவுத் துறை மற்றும் கருத்தரங்கு கட்டிடம்,

250 மாணவர்களுக்கான விரிவுரை அரங்கம் உள்ளிட்ட 6 கட்டிட பணிகளுக்காக தமிழக அரசு 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று மருத்துவ கல்லூரி, வளாகத்தில் நடை பெற்றது. இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு கட்டிடங்களுக்கான அடிக்கல்லை நாட்டினார். நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 39

0

0