வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை: வழக்கறிஞர் கூட்டத்தில் கே.என். நேரு பேச்சு

1 December 2020, 10:29 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை மேற்கு மத்திய மண்டல டெல்டா திமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் ஜனவரி மாதத்தில் திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் மாநாடு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேசியதாவது:- இந்த தேர்தலில் வழக்கறிஞர் பணி என்பது மிகவும் அத்யாவசிய பணியாக இருக்கப்போகிறது. தேர்தலின் போது வாக்கு பதிவு முடிந்த பின்னர் வாக்கு பதிவு இயந்திரம் சீல் வைக்கப்படும் போது திமுக ஏஜெண்டுகள் கடைசியாக தான் கையெழுத்து இட வேண்டும். ஏனெனில் முதலில் கையெழுத்து வாங்கி விட்டு பின்னர் வாக்கு பதிவு மோசடி வேலைகள் நடைபெறலாம். ஏனெனில் வாக்கு பதிவு இயந்திரத்தின் மீது நமக்கு நம்பிக்கை இல்லை. இந்த முறை திமுக தகவல் தொடர்பு அணியினர் ஒரு கணக்கெடுத்தனர்.

234 தொகுதியிலும் எத்தனை வாக்கு பதிவாகி இருக்கிறது. எத்தனை வாக்கு எண்ணப்பட்டு இருக்கிறது என்பதை கணக்கிட்டு பார்க்கும் போது கிட்டதட்ட 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் 15 ஆயிரம் கூடுதலாக உள்ளது. வாக்கு பதிவு இயந்திரம் பழுதானால், மாற்று ஏற்பட்டிற்காக கொண்டு வரப்படும் கூடுதல் இயந்திரங்களில் வாக்கு பதிவு ஏதேனும் உள்ளதா என்பதை நன்றாக கண்காணிக்க வேண்டும்.

பாராளுமன்ற தேர்தலில் தேனியில் மட்டும் வெற்றி வாய்ப்பை திமுக கூட்டணி இழந்தது. அந்த தொகுதியில் ஸ்பேர் என்று சொல்லி 500க்கு பதிலாக ஆயிரம் வாக்கு பதிவு இயந்திரங்களை கொண்டு வந்து அங்கு இறக்கி உள்ளனர். அதில் என்ன நடந்தது என்று தொியவில்லை. வரும் தேர்தலில் திமுக சார்பில் 2500 வழக்கறிஞர்கள் பணியாற்ற உள்ளனர் என்றார்.

Views: - 0

0

0