தொண்டி காவல் நிலைய ஆய்வாளருக்கு நோட்டீஸ்… உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…

13 August 2020, 3:13 pm
Madurai HC- updatenews360
Quick Share

மதுரை: முன்விரோதம் காரணமாக போலி மருத்துவருக்கு உதவி செய்ததாக கூறி காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய கோரிய வழக்கில் மனுதாரர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, தொண்டி காவல் நிலைய ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் அகமது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016 – ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன் . மக்கள் சட்ட உரி மைகள் கழகம் மூலமாக பல் வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறேன் . தொண்டியை சேர்ந்தவர் முருகேசன் . இவரது தாயார் அழகம்மாளுக்கு உடல்நலக்குறைவால் கடந்த பிப்ரவரி மாதம் அதே பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். அங்கு கொடுத்த மருந்துகளை அழகம்மாள் சாப்பிட்டு வந்துள்ளார். சில நாட்களில் இறந்துவிட்டார். இதற்கிடையே அந்த கிளினிக் நடத்தி வந்த ராஜலட்சுமி போலி டாக்டர் என்பதும் அவர் போலீசுக்கு பயந்து தலைமறைவானார் என்ற தகவல் முருகேசனுக்கு
கிடைத்துள்ளது.

அவர்தான் தனது தாயாரின் சாவுக்கு காரணம் எனவும் , ராஜலட்சுமி கிளினிக் நடத்த நான் உள்பட சிலர் பண உதவி செய்ததாக போலீசில் புகார் செய்தார் . அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர் . இந்த வழக்கில் என்னை 5 – வது குற்றவாளி சேர்த்துள்ளனர் ஆனால் எனக்கும் ராஜலட் சுமிக்கும் எந்த தொடர்பும் கிடையாது . இந்த வழக்கில் வேண்டுமென்றே என்னை சேர்த்துள்ளனர் . இதனால் நான் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு உள்ளேன் . எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். முதற்கட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார் .

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது . விசாரணை முடிவில் , மனுதாரர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது . இந்த வழக்கு குறித்து தொண்டி காவல் நிலைய ஆய்வாளருக்கும் , முருகேசனுக்கும் நோட்டீஸ் அனுப்பவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Views: - 7

0

0