மீண்டும் மணல் கொள்ளை கண்டுகொள்ளாத அதிகாரிகள்: செய்தியாளர்களை கண்டதும் தப்பி ஓட்டம் பிடித்த மணல் கொள்ளையர்கள்…

Author: Udhayakumar Raman
23 September 2021, 1:58 pm
Quick Share

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் வெள்ளோடு அருகே உள்ள அமலிநகர் பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்தக் குளத்தில் இரவு பகலாக கடந்த 10 நாட்களாக டிப்பர் லாரிகள் மூலம் ஜேசிபி இயந்திரம் கொண்டு தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்றும் இதே பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஐந்துக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் கிராவல் மண்ணை அள்ளிக் கொண்டு இருந்தனர். செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பதை தொடர்ந்து மண் கொள்ளையில் ஈடுபட்டு கொண்டிருந்த மணல் கொள்ளையர்கள் வாகனங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் மணல் கொள்ளையர்கள் இப்பகுதி மக்கள் கேட்டால் உடனடியாக அவர்களை மிரட்டுகின்றனர். மேலும் இப்பகுதியில் ஏற்கனவே மணல் கொள்ளையர்களால் 40 அடி 50 அடி வரையில் குளங்களில் மணல் கொள்ளையர்களால் மண் தோண்டப்பட்ட கிணறு போல் காட்சியளிக்கிறது.

இதன் காரணமாக இப்பகுதியில் மழை காலங்களில் கூட குளங்களில் தண்ணீர் நிற்பது கிடையாது. இதனால் நிலத்தடி நீரும் பாதித்துள்ளது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மீண்டும் 24 மணி நேரமும் மணல் கொள்ளையர்கள் மணல் திருட்டில் ஈடுபடுவது இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயம் முற்றிலும் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. மேலும் இதே பகுதியில் கிராம நிர்வாக அதிகாரி கிராம ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி தலைவர்கள் என பல்வேறு நபர்கள் இருந்தும், மணல் கொள்ளையை யாரும் தடுப்பது கிடையாது அரசு அதிகாரிகள் ஆதரவுடன் தான் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாகவும், ஆகவே உடனடியாக மாவட்ட மற்றும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Views: - 156

0

0