கோவணத்துடன் 3வது நாளாக விவசாயிகள் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து போராட்டம்…
Author: kavin kumar14 October 2021, 5:53 pm
திருச்சி: மத்திய அரசை கண்டித்து கோவணத்துடன் 3வது நாளாக விவசாயிகள் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி கொன்ற மத்திய அமைச்சர் மகன் உள்ளிட்டவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க கோரியும், காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்த 10 லட்சம் நெல்மணி மூட்டைகளை தமிழக அரசு உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று 3ம் நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டமாக விவசாயிகள் கோவணம் கட்டி திருவோடு ஏந்தி பிச்சை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
0
0