ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல்… சர்வாதிகாரம் : முத்தரசன் கருத்து!!

28 November 2020, 2:18 pm
Mutharasan - Updatenews360
Quick Share

திருச்சி : ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என்பது சர்வாதிகாரத்தனமானது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் கம்யூனசத்தை வளர்க்க பெரும் பாடுபட்ட ஏங்கல்ஸ் அவர்களின் 200 வது பிறந்த தினத்திற்கு பூ தூவி மரியாதை செலுத்தி விட்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு மாபெரும் யுத்ததை தொடங்கியுள்ளது.வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டங்கள் தொடரும்.
ஒரே தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.ஒரே நாடு,ஒரே மொழி,ஒரே தேர்தல் என கூறுவது சர்வாதிகாரத்தனமானது.மத்திய அரசு தன் செயல்பாட்டின் மூலம் திணிக்க பார்க்கிறது.நலத்திட்ட பணிகள் செய்ய முடியாமல் போகிறது என பிரதமர் கூறுவது வெறும் காரணங்கள் தானே தவிர அவர்களின் நோக்கம் வேறு.

இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் ஒரு போதும் மக்களின் இழப்பை ஈடு செய்யாது.அடிப்படையில் செய்ய வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை அரசு மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவ மேற்படிப்பிற்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு திட்டமிட்டே உச்சநீதிமன்றம் மூலம் மறுத்துள்ளது.இட ஒதுக்கீடு என்பதை முழுமையாக நடைமுறைப்படுத்த கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியோடு இருக்கிறது.

Views: - 16

0

0