குடியிருப்புகள் மத்தியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: மக்கள் திடீர் தர்ணா

2 November 2020, 4:51 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு அருகே குடியிருப்புகள் மத்தியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர் குளம் அடுத்துள்ள பச்சப்பாளி மேடு பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசித்து வருபவர்கள் பெரும்பாலோனோர் விவசாயம் செய்து வருகின்றனர்‌ ‌.இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் மணி என்பவருக்கு சொந்தமான காலியான இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்கான பணிகள் இன்று துவங்குவதாக இருந்தது.

இதனை அடுத்து அப்பகுதி மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் செல்போன் கோபுரம் மூலம் கதிர்வீச்சு காரணமாக குழந்தைகள் மற்றும் கால்நடைகள் அதிகளவு பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை ஈடுப்பட்டனர்.

Views: - 11

0

0