2 ஆவது முறையாக மூடப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம்: மூன்று நாட்களுக்கு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடை…

12 August 2020, 9:15 pm
Quick Share

அரியலூர்; கொரோனாவால் 2 ஆவது முறையாக மூடப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டதையடுத்து மூன்று நாட்களுக்கு ஊழியர்கள் பொதுமக்கள் வர தடைவிதக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மூன்று நாட்களுக்கு அலுவலகம் மூடப்பட்டது. இதனையடுத்து பொருப்பு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு குறைந்த அளவிலான ஊழியர்களை கொண்டு அலுவலக பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் தற்போது அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றபட்டு அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு மூன்று நாட்களுக்கு மூடப்பட்டது. மூன்று நாட்களுக்கு அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாச்சியர், வட்டாச்சியர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல்நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த அலுவலகங்களும் மூடப்பட்டு வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 8

0

0