கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகள் உணவருந்தாமல் போராட்டம்

14 May 2021, 3:34 pm
Quick Share

அரியலூர்: அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கபட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகள் உணவருந்தாமல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை முகாம் செயல்பட்டு வருகின்றது. இங்கு கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்கள் ஆண்கள், பெண்கள் என 52 பேர் முகாமில் தங்க வைக்கபட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று கொரோனா தொற்று பாதித்தவர்கள் உணவருந்தாமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கொரோனா மையத்தில் 10 கழிவறைகள் உள்ளதாகவும், அதில் மூன்று கழிவறைக்கு கதவுகள் இல்லை என குற்றம் சாட்டினர். அதுமட்டுமின்றி தினமும் ஒரு வேலையாவது சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இதனை கண்டித்து உணவினை சாப்பிடாமல் கொரோனா தொற்று நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.

Views: - 88

0

0