உரிய ஆவணங்களின்றி புதுச்சேரிக்குள் நூழைந்த வாகனங்களுக்கு அபராதம்…

Author: kavin kumar
16 February 2022, 5:10 pm
Quick Share

புதுச்சேரி : தமிழகத்தில் இருந்து உரிய ஆவணங்களின்றி புதுச்சேரிக்குள் நூழைந்த வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தனர்.

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த வாகனங்கள் உரிய ஆவணங்கள் இன்றி புதுச்சேரிக்குள் வருவதாக போக்குவரத்து துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. இதனை அடுத்து, புதுச்சேரி போக்குவரத்து துறை ஆய்வாளர் பிரபாகர் மற்றும் புதுச்சேரி போக்குவரத்து தெற்கு பகுதி கண்காணிப்பாளர் மோகன் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் அதிகாரிகள் புதுச்சேரி – கடலூர் எல்லையான முள்ளோடை பகுதியில் தீடிர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது கடலுார் மற்றும் தமிழக பகுதிகளில் இருந்து வந்த வணிக மற்றும் சுற்றுலா வாகனங்கள் உரிய பர்மிட், காப்பீட்டு, வாகன தகுதி சான்றிதழ் உள்ளதா என்பது குறித்து சோதனை செய்தனர். சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை , பர்மிட் இல்லாத மூன்று லோடு வாகனங்கள், தகுதி சான்றிதழ் இல்லாத லோடு கேரியர்கள் வாகனம் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 30 க்கும் மேற்பட்ட வாகனத்திர்கு அபராதம் விதித்தனர்.

இது போல் உரிய ஆவணங்கள் இன்றி புதுச்சேரிக்குல் இனி நூழைய கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர். மேலும் இது போல் அல்வப்போது எல்லை பகுதிகளில் திடிர் சோதனைகள் நடத்தப்படும் என போக்குவரத்து மற்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 697

0

0