ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி: விளையாடி கொண்டிருந்தபோது பரிதாபம்

11 September 2020, 1:42 pm
Quick Share

வேலூர்: குடியாத்தம் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் காணாற்று வெள்ளத்தால் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் மகள் கீர்த்தனா (8) வயது 3-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரது மகள் பாவனா (12) 7 ம் வகுப்பு படித்து வருகிறார் இவர்கள் இருவர் உட்பட மேலும் சில பெண்கள் மற்றும் சிறுமிகள் கானாற்றில் குளித்து துணி துவைத்து கொண்டிந்தனர்.

அப்போது சிறுமிகள் கீர்த்தனா, பாவனா ஆகியோர் கானாற்றில் உள்ள தண்ணீரில் இறங்கி விளையாடி கொண்டிருந்த போது ஆற்றில் ஆழமான பகுதியில் சிக்கினர். அப்போது ஆற்றில் வேகமாக வந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கினர் இதனை பார்த்த அங்கிருந்த பெண்கள் கூச்சலிட்டனர். ஆற்றில் குளித்து கொண்டிருந்த பொதுமக்கள் ஆற்றில் குதித்து கீர்த்தனா, பாவனா ஆகியோரை மீட்டனர்.

பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் கீர்த்தனா பரிதாபமாக இறந்தாள். பாவனா பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி இறந்தாள். இது குறித்து வழக்கு பதிவு செய்து பேர்ணாம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் காணாற்று வெள்ளத்தால் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 0

0

0