இடிந்து சிதலமடைந்த அரசு கால்நடை மருத்துவமனை கட்டிடம்: கால்நடை மருத்துவமனையை அகற்றி புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

Author: kavin kumar
16 August 2021, 5:56 pm
Quick Share

தேனி: பெரியகுளம் அருகே இடிந்து சிதலமடைந்த அரசு கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன் பகுதியில் அதிக அளவில் ஆடு, மாடு மற்றும் நாட்டுக்கோலி வளர்ப்பில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு அந்த பகுதியில் கால்நடை மருத்துவமனை கட்டி செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த கால்நடை மருத்துவமனை உட்பகுதியிலும், வெளிப்பகுதியில் பாதி இடிந்த நிலையில் அந்தரத்தில் தொங்கியவாரு உள்ளது. மேலும் கால்நடை மருத்துவமனை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் கால்நடைகளுக்கு சிகிச்சைக்கு வரும் கால்நடை வளர்பாளர்கள் அச்சத்துடனே கால்நடைகளை சிகிச்சைக்கு கொண்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே கால்நடைதுறை உரிய நடவடிக்கை எடுத்து கால்நடை மருத்துவமனை இடிந்து விபத்து ஏற்படும் முன்பு இடிந்து விழும் நிலையில் உள்ள கால்நடை மருத்துவமனையை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டி கால்நடை மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு உரிய பாதுகாப்படை உறுதி செய்ய உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என அபகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 171

0

0