கொரோனா பரிசோதனை எடுக்கச் சொன்னதால் தகாத வார்த்தையில் பேசிய நபர்: வழக்கு பதிவு செய்த போலீசார்

Author: Udhayakumar Raman
5 August 2021, 4:57 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் கொரோனா விழிப்புணர்வுக்காக பரிசோதனை எடுக்கச் சொன்னதால் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 3வது அலையை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் தேசபந்து மைதானம் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் பொதுமக்களிடம் முகக் கவசங்கள் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், அறிவுறுத்தி வந்ததுடன் முக்க கவசம் அணியாதவர்களுக்கு மருத்துவ குழு உதவியுடன் பரிசோதனையும்,

எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவ்வழியே முகக் கவசம் அணியாமல் வந்த பாண்டியன் நகரைச் சேர்ந்த லோடுமேன் அழகு முத்து என்பவரை சங்கர நாராயணன் கொரோனா பரிசோதனை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இதனைக் கேட்காத அழகுமுத்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தகாத வார்த்தையால் பேசிய லோடுமேன் அழகுமுத்து மீது மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன் புகார் அளித்துள்ளார். தனால் விருதுநகர் மேற்கு காவல்துறையினர் அழகுமுத்துவை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 149

0

0