போலி மருத்துவம் பார்த்த தனியார் மருத்துவமனைக்கு மூடி சீல் வைத்த போலீசார்
Author: kavin kumar6 October 2021, 3:51 pm
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே போலி மருத்துவம் பார்த்த தனியார் மருத்துவமனையின் மீது போலீசார் வழக்குபதிவு செய்ததுடன் மூடி சீல் வைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுக்கா பாண்டின்குப்பம் கிராமத்தை சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண்ணான சந்திரலேகா க/பெ பெருமாள் என்பவர், சின்னசேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் குழந்தையின் வளர்ச்சி சரியில்லை என்று கூறி கடந்த 27.09.2021-ந் தேதி மேற்படி சந்திரலேகாவிற்கு கருகலைப்பு மற்றும் குடும்ப கட்டுப்பாடும் செய்துள்ளானர், அறுவைசிகிச்சைக்கு பின்பு அதிக இரத்தம் வெளியேறியதால்ஆபாத்தான நிலையில் இருக்கும் நிலையில் சந்திரலேகாவின் உறவினர்கள் நேற்று சின்னசேலத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமரசம் செய்து வைத்தனர். பின்பு காவல்துறையினர் விசாரணை செய்கையில், சின்னசேலத்தில் உள்ள லிங்கம் மருத்துமனை கருகலைப்பு மற்றும் குடும்ப கட்டுப்பாடு செய்வதற்கு உண்டான உரிய அரசு அனுமதி பெறாமல் மருத்துவமனை இயங்கி வந்தது தெரியவந்துள்ளது, உடனடியாக சின்னசேலம் அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் திரு.செந்தில்குமார் MBBS அவர்கள் கொடுத்த புகார்மனுவைப் பெற்று லிங்கம் மருத்துவமனை நிர்வாகிகள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர், பின்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி வருவாய்துறையினர் மூலம் மேற்படி தனியார் மருத்துவனையை மூடி சீல் வைத்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் யாரேனும் உரிய அரசு அங்கிகாரம் பெறாமல் மருத்துவம் பார்த்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
\
0
0