பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!! முதியவர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறிய பாஜகவினர்

29 September 2020, 6:05 pm
Quick Share

கோவை: கோவையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு முதியோர்களுக்காக அறுசுவை உணவு பரிமாறப்பட்டது

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த பதினேழாம் தேதி முதல்பல்வேறு நலத்திட்டங்கள் ,சிறப்பு வழிபாடுகள்,ஏழை குடும்பங்களுக்கு கல்வி உதவிகள் என பல்வேறு சேவைகளை தமிழக பா.ஜ.க.வினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். சேவா வாரமாக கொண்டாடப்பட்டு வரும் இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பா.ஜ.க.அரசு தொடர்பு பிரிவு சார்பில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தேசிய நகர்புற இயக்கத்தின் திட்டத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் சுமார் எழுபத்தி ஐந்து முதியோர்களுக்கு அறுசுவைகளுடன் கூடிய மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாஜக அரசு தொடர்பு பிரிவின் மாவட்ட தலைவர் ராஜன், மாவட்ட பிரபாரி ஜோதி, ஆகியோர் தலைமையில் நடைபெற்ற, இவ்விழாவில், துணை தலைவர்கள் மது, ஓம் ஆனந்த், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முதியோர்களுக்காக பிரத்யேகமாக சமைக்கப்பட்ட சைவ வகை உணவுகளான சாதம், கீரை வகை கூட்டு பொரியல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சூப் வகைகள், பாயாசம் என அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.