தமிழ் புத்தாண்டு திருநாள்: பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து..!!

14 April 2021, 8:30 am
Modi_UpdateNews360
Quick Share

புதுடெல்லி: தமிழ் புத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டையொட்டி ட்விட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் என பதிவிட்டுள்ளார். மேலும், புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும், ஆரோக்கியத்தையும் செல்வத்தையும், மகிழ்ச்சியையும் நிறைக்க, இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன்.

Views: - 12

0

0