வரும் 23 ம் தேதி பிரதமர் மே.வங்கத்திற்கு பயணம்
21 January 2021, 11:17 pmநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வரும் 23ம் தேதி மேற்கு வங்க மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்திய தேசிய ராணுவத்தை நிறுவிய நேதாஜி, சுபாஷ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாள் விழா வரும் 23ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ‘பரக்ரம் திவாஸ்’ எனும் வலிமை தினமாக கொண்டாட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு வரும் 23ம் தேதி பிரதமர் மோடி மே.வங்கமாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். தலைநகர் கோல்கட்டாவில் நடைபெறும் போஸ் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ படையில் பங்களிப்பு செய்த முக்கிய நபர்களை கவுரவிக்கும் பிரதமர் மோடி, கண்காட்சி ஒன்றையும் துவங்கி வைக்கிறார். இந்திய தேசிய ராணுவ படையை சேர்ந்த சுமார் 26 ஆயிரம் தியாகிகளின் நினைவாக நினைவிடம் எழுப்பவும் ஆலோசனை நடந்து வருகிறது. முதலாவது வலிமை தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். இதற்காக பிரதமர் மோடி தலைமையில் 85 பேர் கொண்ட உயர்நிலை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. என மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் தெரிவித்து உள்ளார்.
மேலும் பிரதமரின் வருகை எந்த வித அரசியல் உள்நோக்கமும் இல்லை எனவும் விழாவில் மாநில கவர்னர் ஜகதீப் தங்கரும் கலந்து கொள்கின்றார். என மத்திய அமைச்சர் கூறினார். இதனிடையே வரும் 23 ம் தேதி மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சிறப்பு நிகழ்ச்சியாக பாதயாத்திரையை மேற்கொள்கிறார். மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரதமர் மோடி அசாம் மாநிலத்திற்கு செல்கிறார். அங்கு சிவாசாகர் என்னும் இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். வரும் ஏப்ரல் மே மாதங்களில் மே.வங்கம், அசாம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமரின் இரு மாநில சுற்றுப்பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
0
0