கோவையில் இதுவரை 24 ஆயிரம் பேருக்கு தொழில் முறை பயண இ-பாஸ்.!

10 August 2020, 8:48 pm
Cbe Collector Office - Updatenews360
Quick Share

கோவை: தமிழகத்தில் வெவ்வேறு பகுதியில் இருந்து தொழில் முறை பயணமாக கோவை வருவதற்காக இ-பாஸ் விண்ணப்பித்தவர்களில் 24 ஆயிரத்து 938 பேருக்கு இதுவரை இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்துலை தொடர்ந்து தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டம் செல்ல இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சொந்த ஊர் திரும்புதல், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லுதல் மற்றும் தொழில் முறை பயணமாக செல்லுதல் உள்ளிட்ட வகைகளின் கீழ் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் தொழில் முறை பயணமாக கோவைக்கு வந்து செல்ல கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 67 ஆயிரத்து 665 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், இதுவரை 24 ஆயிரத்து 938 பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 19 ஆயிரத்து 268 பேருக்கு பாஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 23 ஆயிரத்து 459 பேரின் விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனையில் உள்ளது.

Views: - 2

0

0