ஜிப்மர் நிர்வாகத்தின் அறிவிப்பை கண்டித்து போராட்டம்: பெரியார் திராவிட கழகத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு
Author: kavin kumar25 September 2021, 4:58 pm
புதுச்சேரி: சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே இனி இலவச மருத்துவம் என்ற ஜிப்மர் நிர்வாகத்தின் அறிவிப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் திராவிட கழகத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய அரசு மருத்துவமனையான ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 1ம் தேதி முதல் சிகப்பு நிற ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் இலவச சிகிச்சை என்றும், மற்றவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 50க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனையின் இந்த அறிவிப்பை கண்டித்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். இதனை மீறி போராட்டகாரர்கள் மருத்துவமனை உள்ளே நுழைய முயன்றனர். இதனையடுத்து போரீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். போராட்டம் காரணமாக ஜிப்மர் மருத்துவமனை முன்பு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
0
0