மரணம் அடைந்த காங்கிரஸ் நிர்வாகி குடும்பத்துக்கு காங்கிரஸ் சார்பில் குடும்பநல நிதியுதவி வழங்கல்…
13 August 2020, 4:49 pmதிருவாரூர்: முத்துப்பேட்டை அருகே திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்த காங்கிரஸ் நிர்வாகி குடும்பத்துக்கு காங்கிரஸ் சார்பில் குடும்பநல நிதியுதவி வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தை சேர்ந்தவர் புரோஷோத்தமன். மிகவும் ஏழைஎளிய குடும்பத்தை சேர்ந்த இவர் நீண்டகால காங்கிரஸ் தொண்டராக இருந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். தற்பொழுது வட்டார காங்கிரஸ் துணைச்செயலாளராக பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் இன்று காங்கிரஸ் சார்பில் முதல் கட்ட குடும்பநல நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி கிழக்கு வட்டார தலைவர் வடுகநாதன் தலைமையில் நடைப்பெற்றது. மேற்கு வட்டார தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
இதில் கலந்துக்கொண்ட மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் அன்பு வே.வீரமணி, மறைந்த காங்கிரஸ் நிர்வாகி புரோஷோத்தமனின் படத்தை திறந்து வைத்து அவரின் குடும்பத்தினரிடம் குடும்பநல நிதியுதவியாக முதல் கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை வழங்கினார். மேலும் அடுத்தக்கட்ட நிதியுதவி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் விரைவில் வழங்கப்படும் என்றும்,
அவரின் மகன்கள் கல்வி செலவையும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஏற்க்க பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்தார். அப்பொழுது மாவட்ட அமைப்பு செயலாளர் கோவி.ரெங்கசாமி, மாவட்ட விவசாய பிரிவு தலைவர் இளங்கோவன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அப்பாசாமி, உதயமார்த்தாண்டபுரம் காங்கிரஸ் நிர்வாகிகள் சயீத் முபாரக் ஆலிம், அரபு முகமது, குடிச்சேத்தி கிளை தலைவர் சந்திரசேகரன், மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெயபால் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.