பிளாஸ்டிக் தொழிற்சாலையை மூட வலியுறித்தி கருப்பு கொடி ஏந்தி பொதுமக்கள் போராடடம்

17 November 2020, 5:27 pm
Quick Share

கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே மூன்று கிராம மக்களின் உயிருக்கு ஆபத்தாக உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையை மூட வலியுறித்தி கருப்பு கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குமரி மாவட்டம் அருமனை அருகே விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட மாங்கோடு, புலியூர்சாலை, மஞ்சாலுமூடு ஊராட்சி பகுதிகள் உள்ளது. இங்கு நூற்றுகணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் , மற்றும் குடியிருப்பு பகுதிகள் நிறைந்த அம்பலக்காலை எனும் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த கிளாஸ்டின் ஜெப என்பவர் ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலை துவங்க கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு நீண்ட காலமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர்.

ஆனால் தற்போது அந்த தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து தொழிற்சாலை பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்குவதற்கான பணிகளில் ஆலை நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் , அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான ஊர்மக்கள் திரண்டு கருப்பு கொடி ஏந்தி இந்த ஆலை செயல்பட்டால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், நிலத்தடி நீர், குடிநீர், காற்று மாசு ஏற்பட்டு மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் எனவே இந்த நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி ஆலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டம் கைவிடாத காரணத்தால் போலீசார் பொது மக்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.

Views: - 19

0

0