மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியீடு; மொத்தம் 511627 வாக்காளர்கள்

16 November 2020, 6:30 pm
Quick Share

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ரத்னா இன்று வெளியிட்டார். அரியலூர் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அந்தந்த கோட்டாச்சியர்கள் பெற்று கொண்டார்.

மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பொருப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டது. இதன்படி இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 5 லட்சத்து 11ஆயிரத்து 627 வாக்காளர்கள் உள்ளனர். அதன்படி அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 560 வாக்காளர்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 67 வாக்காளர்களும் உள்ளனர்.

இருதொகுதிகளிலும் இரட்டை பதிவு, இடமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் 5 ஆயிரத்து 691 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் எனவும் இருதொகுதிகளிலும் சேர்த்து 2006 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்து உள்ளார். இதில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கபட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Views: - 16

0

0